‘வடமாகாணம் எங்கள் வளர் தாயகம்!’

இறுதி அமர்வில் ஒலித்த வடமாகாணசபை கீதம் வடமாகாணசபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், வட மாகாணசபையின் இறுதி அமர்வில்(134வது) ஒலிக்கவிடப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு 1ஆவது மாகாணசபை உருவாக்கப்பட்டபோது கீதம் உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் எவையும் இருக்கவில்லை. இந்நிலையில் வடமாகாணசபை ஆட்சி பொறுப்பேற்றதன் பின் கீதம், செங்கோல், அவை வடிவமைப்பு, ஆசனம் போன்ற அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டது. இதன்படி மாகாணசபை உறுப்பினர்கள்குழு ஒன்று உருவாக்கப்பட்டு இன்றைய தினம் சபைக்கு கொண்டுவரப்பட்டு சபையில் ஒலிக்க விடப்பட்டதுடன், சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.